11th of September 2014
சென்னை:தமிழ்சினிமாவில் அவ்வப்போது நடிகர்கள் காதலில் விழுந்தார்கள் என்று ஏகப்பட்ட செய்திகள் வரும். ஆனால் அதில் விரல் விட்டு எண்ணும் அளவுக்கு மிகச்சிலர் தான் காதலித்தவர்களையே திருமணம் செய்து தங்களது காதலுக்கு நியாயம் செய்திருப்பார்கள். அப்படிப்பட்ட மிகச்சிலரில் ஒரு ஆதர்ச நட்சத்திர தம்பதி தான் சூர்யா-ஜோதிகா இருவரும்..
பூவெல்லாம் கேட்டுப்பார்’ படத்தில் நடித்தபோது ஜோதிகாவுக்கும் சூர்யாவுக்கும் ஆரம்பித்த நட்பு அடுத்தடுத்து ‘உயிரிலே கலந்தது, காக்க காக்க’, ‘பேரழகன்’, ‘சில்லுனு ஒரு காதல்’, ‘மாயாவி’ என தொடர்ந்து பல படங்களில் இணைந்து நடிக்கும்போது காதலாக மாறியது. இரு குடும்பத்தாரின் சம்மதத்துடன் 2006ஆம் வருடம் இதே நாளில் ஜோதிகாவை கரம்பிடித்தார் சூர்யா.
திருமணம் செய்துகொண்டு திரையுலக வாழ்க்கைக்கு குட்பை சொல்லிவிட்டு, தமிழ்நாட்டு மருமகளாக குடும்ப வாழ்க்கையில் நுழைந்த ஜோதிகாவை தேடி தொடர்ந்து பல வாய்ப்புகள் வந்தாலும் குடும்பத்துக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்க விரும்பியதால் தொடர்ந்து நடிப்பதில்லை என்கிற முடிவை மனம் விரும்பி எடுத்தார்.
இதோ இன்று சூர்யா ஜோதிகா தம்பதிகளின் மகிழ்ச்சியான மணவாழ்க்கைக்கு அடையாளமாக இரண்டு குழந்தைகள் உள்ளன. இப்போது மீண்டும் நடிப்பதற்கான சூழலும் நேரமும் கனிந்து வந்திருப்பதால் மீண்டும் திரையுலகில் நுழைகிறார் ஜோதிகா.. ஜோதிகா போன்ற நல்ல நடிப்புத்திறமை வாய்ந்த நடிகைகள் திருமணத்திற்கு பிறகு அவ்வளவு எளிதாக நடிக்க சம்மதிக்க மாட்டார்கள்.
ஆனால் தற்போது நடிக்க வந்திருப்பது அவருக்கு ஏற்ற கதை தேடிவந்திருப்பதும் அதற்கு அவரது கணவர் தந்த ஊக்கமும் தான் கடந்த சில மாதங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘ஹவ் ஓல்டு ஆர் யூ?’ படத்தின் தமிழ் ரீமேக்கில் தான் ஜோதிகா நடிக்க இருக்கிறார்.
இன்று வெற்றிகரமான ஒன்பதாம் ஆண்டு திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் சூர்யா-ஜோதிகா தம்பதிக்கு நமது Poonththalir-Kollywood தனது இனிய திருமண நாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.
Comments
Post a Comment