5th of September 2014
சென்னை:நடன இயக்குனராக சினிமாவில் பயணித்த ராகவா லாரன்ஸ், தற்போது தமிழ் மற்றும்
தெலுங்கில் வெற்றி இயக்குனராக பயணித்துக்கொண்டிருக்கிறார். லாயன்ஸ்
இயக்கத்தில் வெளியான காஞ்சனா படம் மாபெரும் வசூலை ஈட்டி சாதனை புரிந்தது.
திகில் படத்தில், வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் அளவுக்கு காமெடியாக சொல்லும் டிரெண்டெ காஞ்சனா படத்திற்குப் பிறகு தான் பரவியது என்றும் சொல்லலாம்.
காஞ்சனா வெற்றியை தொடர்ந்து, லாரன்ஸ் முனியின் மூன்றாம பாகமாக இயக்கியுள்ள கங்கா படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. தற்பொது கிளைமாக்ஸ் காட்சியை படமாக்கி வருகிறார்கள். இது முடிந்ததும், கிராபிக்ஸ் பணியிகள் தொடங்க உள்ளது. படத்தை டிசம்பர் மாதம் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், லாரன்ஸ் தனது அடுத்தப் படத்தின் அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்தார். ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ள லாரன்ஸ், தனது அடுத்த படத்தில் ஒரு டிக்கெட் வாங்கி படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு, இரண்டு படங்களை காட்டப் போகிறார்.
'ஒரு டிக்கெட்ல ரெண்டு சினிமா' - ஒன்னு 'கிழவன் - ஒன்னு ''கருப்பு துரை' இது தான் படத்தின் தலைப்பு. இப்படி தலைப்பிலேயே தான் செய்யப்போவதை சொல்லிவிடும் லாரன்ஸ், இந்த இரண்டு படங்களையும் இயக்கி ஹீரோவாக நடிக்கிறார். இதில் கருப்பு துரை என்ற படத்திற்கு ராய் லக்ஷ்மி நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கிழவன் படத்திற்கான ஆண்ட்ரியாவிடம் பேசி வருகிறார்கள்.
பொதுவாக ஒரு படம் இரண்டரை மணி நேரம் ஒடுகிறது. ஆனால், இப்படத்தை பொறுத்தவரை, ஒரு மணி நேரம், 20 நிமிடத்திற்கு ஒரு படமும், மற்றொரு ஒரு மணி நேரம், 20 நிமிடத்திற்கு ஒரு படமும் திரையிடப்படும். இந்த இரண்டு படங்களுக்கும் எந்தவித ஒற்றுமையும் இருக்காது. படம் ஆரம்பித்து இடைவேளை வரை ஒரு படமும், இடைவேளை முடிந்த பிறகு ஒரு படமாகவும், இரண்டு படங்களை ஒரே நேரத்தில் ரசிகர்கள் பார்க்கலாம்.
இதுவரை பாடல்கள் மட்டும் எழுதிய விவேகா இந்தப் படங்களில் பாடல்களுடன் வசனத்தையும் எழுதுகிறார்.இசையமைப்பாளர்கள் இருவர் ஒருவர் லியோன் ..இன்னொருவர் புதியவர்.
விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ள இப்படத்தின் மூலம், தமிழ் சினிமாவுக்கு மேலும் ஒரு புதிய பாதையை லாரன்ஸ் காட்டியிருக்கிறார்

Comments
Post a Comment