சென்னை:பேய் சீசனில் அடுத்ததாக என்ட்ரி கொடுத்திருக்கும் படம் தான் ‘மூச்’.. இயக்குனர் பாரதிராஜாவிடம் இணை இயக்குனராக பணியாற்றிய வினுபாரதி இயக்கியுள்ள இந்தப்படத்தில் நாயகனாக மலையாள நடிகர் நிதின் நடிக்கிறார். நாயகியாக மிஷா கோஷல் நடிக்கிறார். இப்படத்திற்கு நிதின் கார்த்திக் என்பவர் இசையமைக்கிறார்.
மேலும், இப்படத்தில் மனோதத்துவ டாக்டராக பாரதிராஜாவின் சகோதரர் ஜெயராஜ் நடிக்கிறார். இவர்களுடன் அபி-தியா என்ற இரு குழந்தைகள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பேய்ப்படம் என்று சொன்னாலும் வழக்கமான ஹாரர் படங்களில் இருந்து இது முற்றிலும் மாறுபட்டிருக்குமாம்.
அதாவது இரு குழந்தைகளை மூச்சாக எண்ணி உரிமை கொண்டாடும் ஒரு தாய்க்கும்-பேய்க்கும் இடையே நிகழும் திகில் கலந்த பாசப்போராட்டமே ‘மூச்’. திரில்லர் படமாக இருந்தாலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும்படியும் நகைச்சுவையுடனும் இருக்குமாம். இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
Comments
Post a Comment