2nd of September 2014
சென்னை:நாயகியாக பல ஆண்டுகள் சினிமாவில் தாக்குப் பிடிப்பது ஒரு சாதனைதான்.
த்ரிஷா, நயன்தாரா போலவே தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் தாக்குப் பிடிக்கும்
இன்னொரு நடிகை ராய் லட்சுமி. இவரது நடிப்பில் சென்ற வாரம் இரும்பு குதிரை
வெளியானது. விரைவில் அரண்மனை படம் வெளியாக உள்ளது.
சுந்தர். சி இயக்கியிருக்கும் அரண்மனையில் ஹன்சிகா மற்றும் ஆண்ட்ரியாவுடன்
ராய் லட்சுமியும் நடித்துள்ளார். பத்திரிகையாளர் சந்திப்பில், நடிப்பு
தவிர்த்த ராய் லட்சுமியின் இன்னொரு திறமையையும் நடிகர் மனோபாலா
வெளியிட்டார்.
அது சீட்டு விளையாடுவது. படப்பிடிப்பின் இடைவேளையில் அனைவரும் சீட்டு
விளையாடுவார்களாம். அதில் எப்போதும் ஜெயிப்பவர் ராய் லட்சுமிதானாம்.
அரண்மனை படப்பிடிப்பில் அவர் ஜெயித்த பணத்தை வைத்து ஒரு காரே வாங்கலாம்
என்றார் மனோபாலா.
சினிமா கைவிட்டாலும் காஸினோ வைத்து பிழைக்கலாம்.
Comments
Post a Comment