29th of September 2014
சென்னை::கும்கி, இவன் வேற மாதிரி, அரிமா நம்பி, சிகரம் தொடு ஆகிய நான்கு தொடர்
வெற்றி படங்களை கொடுத்த விக்ரம் பிரபு, தற்போது நடித்து வரும் படம்
‘வெள்ளைக்கார துரை. இதில் இவருக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்து வருகிறார்.
மேலும் சூரி, எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, வையாபுரி, ஆடுகளம் நரேன்,
சிங்கம்புலி, மதன்பாப், சிங்கமுத்து, நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்ட பல
நடிகர்கள் நடித்து வருகின்றனர்.
இப்படத்தை துள்ளாத மனமும் துள்ளும், தீபாவளி, பெண்ணின் மனதை தொட்டு, மனம் கொத்தி பறவை போன்ற வெற்றி படங்களை கொடுத்த எழில் இயக்குகிறார். டி.இமான் இசையமைக்கிறார். சூரஜ்நல்லு சாமி ஒளிப்பதிவை கவனிக்கிறார்.
ஒரே பிரச்சினையில் சிக்கி தவிக்கும் விக்ரம் பிரபுவும் ஸ்ரீதிவ்யாவும் அந்த பிரச்சினையில் இருந்து மீண்டு காதலில் ஒன்று சேருவதே படத்தின் மைய கருவாக வைத்து அதில் காமெடி மற்றும் கமர்சியல் படமாக உருவாக்கி வருகிறார் எழில். விக்ரம் பிரபு இப்படத்தில் காமெடி ஹீரோவாக நடிக்கிறார்.
இப்படத்தை ஆயிரம் படங்களுக்கு மேல் விநியோகம் செய்துள்ள அன்புசெழியனின் கோபுரம் பிலிம்ஸ் தயாரிக்கிறது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

Comments
Post a Comment