இந்திய சினிமாவை ஷங்காரால் ஹாலிவுட் அளவிற்கு கொண்டு செல்ல முடியும்; ரஜினி பேச்சு!!!

16th of September 2014
சென்னை:ஹாலிவுட் அளவிற்கு தரத்தில் இந்திய திரைஉலகை ஷங்காரால் கொண்டு செல்ல முடியும் என ஐ பட இசை வெளியிட்டு விழாவில் ரஜினி பேசினார்.

ஷங்கரின் பிரமாண்ட இயக்கத்தில், விக்ரமின் மாறுபட்ட மற்றும் மிரட்டும் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஐ. விக்ரம் ஜோடியாக மதராசப்பட்டினம் ஹீரோயின் எமி ஜாக்சன் நடித்துள்ளார்.

இவர்கள் தவிர்த்து மறைந்த நடிகர் சிவாஜின் மூத்த மகன் ராம்குமார், மலையாள நடிகர் சுரேஷ் கோபி உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்,

பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார். சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உருவாகி வந்த இப்படம் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. தீபாவளிக்கு படம் ரிலீஸாக இருக்கிறது.

இதனிடையே இப்படத்தின் முதல் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் விக்ரமின் தோற்றத்தை பார்த்து அனைவரும் மிரட்டும் போய் உள்ளனர்.

இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக ஹாலிவுட் நடிகர் அர்னால்டு பங்கேற்றார்.

ஐ படத்தின் ஆடியோ விழாவுக்காக தனி விமானம் மூலம் சென்னை வந்த அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. -

இந்த விழாவில் கலந்து கொண்டு ரஜினிகாந்த் பேசியதாவது, படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை பார்க்கும் போது, படத்தின் வெள்ளி விழாவை பார்ப்பது போல உள்ளது.
 
ஐ' படம் மிக பிரமாண்டமாக எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலும் கூட ஷங்கர் பிரமாண்டமாக எடுப்பார். ஹாலிவுட் அளவிற்கு தரத்தில் இந்திய திரைஉலகை ஷங்காரால் கொண்டு செல்ல முடியும். இந்த படம் பிரமாண்டமாக வெற்றி பெற வாழ்த்துகள். இவ்வாறு ரஜினி பேசினார்.

Comments