உடல் எடையை அதிகரிக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வரும் சிவகார்த்திகேயன்!!!

27th of September 2014
சென்னை:எதிர் நீச்சல்' படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கம் 'காக்கிச்சட்டை' படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். டாணா என்று தலைப்பு வைக்கப்பட்டு தற்போது காக்கிச்சட்டை என்று தலைப்பு மாற்றப்பட்டுள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயன் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். இதில் நாயகியாக ஸ்ரிதிவ்யா நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

போலீஸ வேடத்தில் நடிப்பதால், தனது உடல் உடையை அதிகரிக்க முடிவு செய்த சிவகார்த்திகேயன், அதற்காக தீவிரமாக ஜிம்மில் உடற்பயிற்சி செய்து வருகிறார். தற்போது, தீவிர உடற்பயிற்சியின் மூலம் 6 கிலோ வெயிட் போட்டுள்ள, சிவகார்த்திகேயன், இந்த படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் தோன்ற உள்ளாராம்.

Comments