பாபநாசம் படம்: கமல் குணமடைந்து மீண்டும் நடிக்கிறார்!!!

30th of September 2014
சென்னை:மோகன்லால், மீனா நடித்து மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய திரிஷயம் படம் தமிழில் பாபநாசம் என்றபெயரில் ரீமேக் ஆகிறது.
இதில் மோகன்லால் வேடத்தில் கமலஹாசனும், மீனா கேரக்டரில் கவுதமியும் நடிக்கின்றனர். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு திருநெல்வேலியில் நடந்து முடிந்துள்ளது. கமல் வேட்டி சட்டையில் இரு மகள்களுக்கு தந்தையாக நடித்தார். அதன் பிறகு அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

 
இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். தற்போது பூரணகுணமடைந்து வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். அடுத்த கட்ட படப்பிடிப்பை கேரளாவில் நடத்த படத்தின் டைரக்டர் ஜீதுஜோசப் திட்டமிட்டுள்ளார். அடுத்த மாதம் முதல் வாரத்தில் அங்கு படப்பிடிப்பு நடக்க உள்ளது. இதற்காக கமல்ஹாசன், கவுதமி உள்ளிட்ட படக்குழுவினர் கேரளா பயணமாகிறார்கள். அங்கு சில வாரங்கள் தங்கி படப்பிடிப்பில் பங்கேற்கிறார்கள். திரிஷயம் படப்பிடிப்பு நடந்து கொடுபுழா பகுதியில் உள்ள வீட்டிலேயே பாபநாசம் படப்பிடிப்பையும் நடத்துகின்றனர்.
 
நவம்பர் மாதம் படப்பிடிப்பு முடியும் என எதிர்பார்க்கப் படுகிறது. ஏற்கெனவே கமலஹாசனின் விஸ்வரூபம் -2, உத்தமவில்லன் படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன. இப்படங்கள் வெளியானதும் பாபநாசம் ரிலீசாகும்.

Comments