விக்ரம் பிரபு-ஸ்ரீதிவ்யா நடிக்கும் ‘வெள்ளக்கார துரை’!!!

25th of September 2014
சென்னை:எழில் இயக்கத்தில் விக்ரம் பிரபு - ஸ்ரீதிவ்யா நடிக்கும் படம் ‘வெள்ளக்கார துரை’. கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் சூரி, ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, வையாபுரி, ஆடுகளம் நரேன், சிங்கம் புலி, மதன் பாப், சிங்கமுத்து, மிப்பு, பாவா லட்சுமணன், விட்டல், வி.ஞானவேல், மகாநதி சங்கர், டாடி சரவணன், நான் கடவுள் ராஜேந்திரன், வனிதா, மதுமிதா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 1000 படங்களுக்கு மேல் வினியோகம் செய்துள்ள பிரபல திரைப்பட வினியோகஸ்தரான மதுரை அன்புசெழியயனின், கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம், வெள்ளக்கார துரை படத்தின் மூதல் முதன் முறையாக தயாரிப்பு துறையில் அடியெடுத்து வைக்கிறது.


இப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி எழில் இயக்க, எழிச்சூர் அரவிந்தன் வசனம் எழுதுகிறார். சூரஜ் நல்லுசாமி ஒளிப்பதிவு செய்ய, டி.இமான் இசையமைக்கிறார். வைரமுத்து, யுகபாரதி ஆகியோர் பாடல்கள் எழுதுகிறார்கள். கலையை ரெமியன் கவனிக்க, தினேஷ் மற்றும் தினா நடனத்தை கவனிக்கிறார்கள். சண்டைப்பயிற்சி திலீப் சுப்புராயன். படத்தொகுப்பு கிஷோர். தயாரிப்பு நிர்வாகத்தை ஜெயராஜ், ரஞ்சித் ஆகியோர் மேற்கொள்ள, தயாரிப்பு மேற்பார்வையாளராக சங்கர்தாஸ் பொறுப்பேற்றுள்ளார். பாலகணேசன் இணை இயக்குநராக பணியாற்ற, மக்கள் தொடர்பை மெளனம் ரவி கவனிக்கிறார்.

படம் குறித்து கூறிய இயக்குநர் எழில், “ஒரே பிரச்னையில் சிக்கி தவித்த விக்ரம் பிரபு  -  ஸ்ரீதிவ்யா இருவரும் அந்த பிரச்னையிலிருந்து மீண்டு காதலில் சேரும் கதை களம் தான் ‘வெள்ளக்கார துரை’. இரண்டு மணி நேரத்திற்கு ரசிகனை திருப்திபடுத்த காமெடி மற்றும் கமர்ஷியலாக  உருவாக்கி இருக்கிறோம். ஏகப்பட்ட  நடிகர், நடிகைகள் திரை முழுக்கவே சரவெடி காமெடி இருக்கும்.

துள்ளாத மனமும் துள்ளும், தீபாவளி, பூவெல்லாம் உன் வாசம், பெண்ணின் மனதை தொட்டு, மனம் கொத்திப் பறவை, தேசிங்கு ராஜா போன்ற படங்களைப்  போல  இதுவும் கமர்ஷியல் பார்முலா படம் தான்.

நல்ல நட்சத்திர நடிகர்கள், தரமான படமெடுக்கும் தயாரிப்பாளர்  அன்புசெழியன், திறமையான கலைஞர்களின் கூட்டணியில் ‘வெள்ளக்கார துரை’ முத்திரை பதிப்பான்.” என்றார்.

கொடைக்கானல், பாண்டி மற்றும் சென்னை உட்பட பல இடங்களில் இப்படத்தின் நடைபெற்றுள்ளது
.

Comments