ஒன்றரை வருடமாக ‘ஒரு பக்க கதை’ யை எழுதிய பாலாஜி தரணிதரன்!!!

5th of September 2014
சென்னை:நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ என்ற மாபெரும் தலைப்புடம், வித்தியாசமான கதைக்களத்தில் மாபெரும் வெற்றிப் பெற்றவர் இயக்குநர் பாலாஜி தரணிதரன். தற்போது இவர் இயக்கும் இரண்டாவது படத்திற்கு ‘ஒரு பக்க கதை’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்.

இப்படத்தை வாசன் விஷ்வல் வென்சர்ஸ் நிறுவனம் சார்பில் கே.எஸ்.ஸ்ரீனிவாசன் தயாரிக்கிறார். இதில் ஹீரோவாக நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் அறிமுகமாகிறார். இவருக்கான ஜோடி தேர்வு தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.


இப்படத்தின் நாயகன் காளிதாஸை ஊடகங்களுக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் கமல்ஹாசன் கலந்துகொண்டு காளிதாஸை அறிமுகப்படுத்தி வைத்தார்.

விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ள இப்படத்தின் கதையை எழுத இயக்குநர் பாலாஜி தரணிதரன் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் எடுத்துக்கொண்டாராம். ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இவரை தங்களது நிறுவனத்திற்காக படம் இயக்கும்படி தயாரிப்பாளர் ஸ்ரீனிவாசன் ஒப்பந்தம் செய்தாராம்.

இதையடுத்து கதை உருவாக்கத்தில் ஈடுபட்ட, பாலாஜி தரணிதரன், பல்வேறு கதைகளை உருவாக்கினாலும், எதிலையும் திருப்தி இல்லை என்று கூறி, அவரே இதை விட நல்லதாக செய்வோம் என்று சொல்வாராம். அப்படி சொல்லியே சுமர் ஒண்றரை ஆண்டுகளாக ‘ஒரு பக்க கதை’ படத்தின் கதை மற்றும் திரைக்கதையை உருவாக்கியுள்ளாராம்.

Comments