கோவிலுக்குள் சென்று சர்ச்சையில் சிக்கினார் நடிகர் கமல்ஹாசன்!!!

7th of September 2014
சென்னை:மோகன்லால், மீனா நடிப்பில் மலையாளத்தில் மாபெரும் வெற்றிப் பெற்ற ‘த்ரிஷியம்’ படம் தமிழில் ரீமேக் செய்யபப்டுகிறது. ‘பாபநாசம்’ என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தில் மோகன்லால் கதாபாத்திரத்தில் கமல்ஹாசனும், மீனா வேடத்தில் கெளதமியும் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு நாங்குநேரி பகுதியில் நடைபெற்று வருகிறது. அங்குள்ள வானமாமலை பெருமாள் கோவிலில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்த கோவிலில் படப்பிடிப்பு நடத்துவதற்காக அங்குள்ள ஜீயர் சாமிகளை நேரில் சந்தித்து கமல்ஹாசன் அனுமதி பெற்றார்.

இந்த நிலையில், அக்கோவிலுக்குள் கமல்ஹாசன் சட்டை அணிந்து சென்றதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

108 வைணவ தலங்களில் ஸ்ரீவானமாமலை, பெருமாள் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலுக்கு ஆண்கள் சட்டை அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. கோவில் வாசலில் வந்ததும் ஆண் பக்தர்கள் சட்டையை கழற்றி வைத்து விட்டு உள்ளே செல்கின்றனர்.

ஆனால், இந்த கோவிலுக்குள் கமல்ஹாசன் சட்டை அணிந்துக்கொண்டு நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டது. இதற்கு அக்கோவில் பக்தர்கள் பெரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கமல் கோவிலிலுக்குள் சட்டை அணிந்து சென்றதாகவும் கோவில் மண்டபத்தில் நடந்த படப்பிடிப்பிலும் சட்டை அணிந்து கொண்டே கலந்து கொண்டதாகவும் இதன் மூலம் கோவிலின் ஸ்தல பாரம்பரிய விதிகள் மீறப்பட்டுள்ளன என்றும் பக்தர்களின் ஒரு சாரர் குற்றம் சாட்டினர்.

Comments