ஸ்பீல்பெர்க்குக்கு சமமானவர் ஷங்கர்” – சுரேஷ்கோபி புகழாரம்!!!

8th of September 2014
சென்னை: மலையாளத்தில் மோகன்லால், மம்முட்டிக்கு அடுத்து மூன்றாவது இடத்தை பிடித்தவர் சுரேஷ்கோபி. நம்ம ஊரில் கேப்டனை போலவே அங்கே போலீஸ் கேரக்டர், ஆக்ஷன் கேரக்டர் என்றால் கூப்பிடு சுரேஷ்கோபியை என்று சொல்லும் அளவுக்கு அதிகமான போலீஸ் படங்களில் நடித்தவர்.
 
தமிழில் தீனா, சமஸ்தானம் ஆகிய படங்களில் நடித்துள்ள சுரேஷ்கோபி இப்போது ஷங்கரின் இயக்கத்தில் ‘ஐ’ படத்தில் வில்லனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தில் நடித்தபோது ஷங்கரின் திறமையைக்கண்டு பலமுறை ஆச்சர்யப்பட்டாராம் சுரேஷ்கோபி.
 
‘ஐ’ படத்தில் நடித்த அனுபவம் பற்றி ஒரு இணைய இதழுக்கு அளித்த பேட்டியில், “ஷங்கர் ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்குக்கு சமமானவர்.. தொழில்நுட்பம் குறித்த அவரது அறிவுதான் அவரை இவ்வளவு உயரத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது” என புகழ்ந்துள்ளார் சுரேஷ்கோபி.

Comments