ஹேப்பி பர்த்டே ட்டு சௌந்தர்யா!!!

20th of September 2014 சென்னை:சூப்பர்ஸ்டார் ரஜினியின் இளைய மகள் என்கிற அடையாளத்துடன் வெளி உலகுக்கு அறிமுகமான சௌந்தர்யா, இப்போது ‘கோச்சடையான்’ இயக்குனர் என்று சொல்லும் அளவுக்கு மிகப்பெரிய அந்தஸ்தை எட்டியுள்ளார். தவிர இந்தியாவின் முதல் மோஷன் கேப்சரிங் அனிமேஷன் படத்தை இயக்கியவர் என்ற பெருமைக்கும் ஆளாகியிருக்கிறார். எளிமை, பணிவு, மற்றவர்களிடம் அன்பு காட்டி பழகும் விதம் என தனது தந்தையைப்போலவே அனைவரையும் கவர்கிறார் சௌந்தர்யா.
 
மிக பிரமாண்டமான திரைப்படங்களை தயாரிக்கும் திரைப்பட நிறுவனமான ஈராஸ் இன்டர்நேஷனல், தற்போது சௌந்தர்யாவை தங்களது கிரியேட்டிவ் டைரக்டர் ஆக நியமித்து அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை வழங்கியிருக்கிறது. இன்று பிறந்தநாள் காணும் சௌந்தர்யாவுக்கு நமது Poonththalir-Kollywood இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.

Comments