ஆண்ட்ரியாவின் டயலாக் தான் ‘எனக்குள் ஒருவன்’ கதையே!!!

10th of September 2014
சென்னை:விஸ்வரூபம் படத்தில் ஆண்ட்ரியா சொல்லும் ஒரு சூப்பர் டயலாக்.. “இங்க எல்லாருக்குமே டபுள் ரோல்”. கிட்டத்தட்ட சித்தார்த் நடித்துள்ளா ‘எனக்குள் ஒருவன்’ படத்தின் கதையும் கிட்டத்தட்ட இந்த டயலாக் மாதிரிதானாம். இதை படத்தின் இயக்குனரான பிரசாத் ராமரே சொல்லியுள்ளார்.
 
$சித்தார்த்துக்கு ஜோடியாக கதாநாயகி தீபா சந்நிதி தமிழுக்கு முதன்முதலில் அடியெடுத்து வைக்கிறார். தவிர ஆடுகளம் நரேன், ஜான் விஜய், யோக் ஜேபி, அஜய்ரத்தினம் ஆகியோரும் நடித்துள்ளார்கள். சி.வி.குமாரின் ஆஸ்தான இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணன் தான் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவை தொடர்ந்து நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய படத்தின் இயக்குனர் பிரசாத் ராமர், “இந்தப்படத்தில் எல்லோருக்கும் டபுள் ரோல் தான்.. அது ஏன் என்பது படம் பார்க்கும்போது உங்களுக்கே புரியும்” என்று கூறியுள்ளார்.

Comments