1st of September 2014
சென்னை:யெஸ்… நீண்டநாட்களுக்கு பிறகு ஒரு மாஸ் என்ட்ரி கொடுக்க இருக்கிறார் சிபிராஜ் என்பது அவர் நடித்துள்ள ‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்தின் டீஸரை பார்க்கும்போதே தெரிகிறது.. இன்று மாலை 5 மணிக்கு ரேடியோ மிர்ச்சி எப்.எம் ஸ்டேஷனில் வைத்து இந்தப்படத்தின் பாடல்கள் வெளியாகயுள்ளன.
பாரிஜாதம்’, ‘போடா போடி’ படங்களுக்கு இசையமைத்த தரண்குமார் தான் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சிபிராஜ் நடித்த ‘நாணயம்’ படத்தை இயக்கிய சக்தி சௌந்தரராஜன் தான் இந்தப்படத்தையும் இயக்கியுள்ளார். சிபிராஜின் சொந்த பேனரிலேயே இந்தப்படம் தயாராகியுள்ளது..
படத்தில் மொத்தமே மூன்று பாடல்கள் தான்.. அப்புறம் தீம் மியூசிக் மற்றும் ‘டாக்கி ஸ்டைல்’ க்ளப் மிக்ஸ்.. இதில் ‘டாக்கி ஸ்டைல்’ பாடலை கானா பாலாவும் ‘என் நெஞ்சில்’ பாடலை நரேஷ் ஐயரும் பாட, இந்த இரண்டு பாடல்களையும் மதன் கார்க்கி எழுதியுள்ளார்.
யுகபாரதி எழுதியுள்ள ‘ஓயாதே ஓயாதே’ பாடலை ஹரிசரணும் இசையமைப்பாளர் தரன்குமாரும் சேர்ந்து பாடியுள்ளனர். இவற்றில் டாக்கி ஸ்டைல்’ பாடல் தான் இனிவரும் நாட்களில் ஹாட் டாபிக்காக இருக்கப்போகிறது. டீஸரில் கூட இந்த டாக்கிஸ்டைல் கிளப் மிக்ஸைத்தான் பயன்படுத்தியுள்ளார்கள்.
Comments
Post a Comment