5th of September 2014
சென்னை:மல்லிகா ஷெராவத் டர்டி பாலிடிக்ஸ் என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தை
விளம்பரபடுத்தி சமீபத்தில் மும்பை மற்றும் தெலுங்கானாவில் போஸ்டர்கள்
ஒட்டப்பட்டன. அதில் மல்லிகா ஷெராவத் ஆடைக்கு பதில் தேசிய கொடியை உடுத்தி
இருப்பது போன்ற படம் இடம் பெற்று இருந்தது.
இந்த போஸ்டருக்கு எதிர்ப்புகள் கிளம்பின. இரண்டு பேர் கோர்ட்டுக்கு சென்றனர். தேசிய கொடியை மல்லிகா ஷெராவத் அவமதித்து விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க போலீசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.
இந்த வழக்கை நீதிபதிகள் விசாரித்து மல்லிகா ஷெராவத்துக்கும் மத்திய அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். தற்போது மல்லிகா ஷெராவத் மீது வழக்கு பதிவு செய்யும்படி போலீசுக்கு உத்தரவிட்டு உள்ளார். இதையடுத்து மல்லிகா ஷெராவத் மீது ஐதராபாத்தில் உள்ள பலக்னுமா போலீஸ் நிலையத்தில் தேசிய கொடியை அவமதித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதனால் மல்லிகா ஷெராவத் கைதாகலாம் என்று தெலுங்கு பட உலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Comments
Post a Comment