1st of September 2014
சென்னை:சிம்பு, வரலட்சுமி நடித்த ‘போடா போடி’ திரைப்படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் தனது அடுத்த படத்தை இயக்க கொஞ்சம் இடைவெளி எடுத்துக்கொண்டு ஸ்கிரிப்ட்டில் கவனம் செலுத்திவந்தார். இப்போது ஸ்கிரிப்ட் வேலைகள் முடிந்து, தனது புதிய படத்தை ஆரம்பித்துவிட்டார்.
இந்தப்படத்தை தனது வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கிறார் தனுஷ்..! படத்தின் பெயர் ‘நானும் ரௌடிதான்’. ஹீரோ நம்ம விஜய்சேதுபதி தான்.. தனுஷுடன் ‘புதுப்பேட்டை’யில் இணைந்து ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்த விஜய்சேதுபதி-தனுஷ் நட்பு இதன் மூலம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. ஹீரோயின் யார் தெரியுமா.. விஜய்சேதுபதியின் பேவரைட்டான நயன்தாராவே தான்..
ஆமாங்க.. சில நாட்களுக்கு முன் விஜய் டிவி விருது வழங்கும் நிகழ்ச்சியில் மேடையேறிய விஜய்சேதுபதியிடம், நீங்கள் ஒரு நடிகையை கடத்தவேண்டும் என்று சொன்னால் இங்குள்ளவர்களில் யாரை கடத்துவீர்கள் என கேட்க சற்றும் யோசிக்காமல் நயன்தாரா என பதில் அளித்தார் விஜய்சேதுபதி. அந்த அளவுக்கு நயன்தாராவின் ரசிகர் அவர். இப்போது அவரது ஆசை ஒரு வழியாக நிறைவேறிவிட்டது. இந்தப்படத்திற்கும் தனுஷின் ஆஸ்தான இசையமைப்பாளர் அனிருத் தான் இசையமைக்கிறார்.
Comments
Post a Comment