அஜீத்துடன் ஜோடியாக நடிக்க வேண்டும்: ஹன்சிகா!!!

20th of September 2014
சென்னை:அஜீத்துடன் ஜோடி சேர ஆசைப்படுவதாக ஹன்சிகா கூறினார். தமிழ், தெலுங்கில் ஹன்சிகா முன்னணி நடிகையாக இருக்கிறார். தமிழில் விஜய், சூர்யா, ஆர்யா, தனுஷ், சிம்பு, ஜெயம்ரவி, கார்த்தி, உதயநிதி போன்றோருக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். ஆனால் இதுவரை அஜீத்துடன் நடிக்கவில்லை.

அஜீத்துடன் ஜோடியாக நடிக்க வேண்டும் என்பது முன்னணி நடிகைகளின் கனவாக இருக்கிறது. இதில் பல நடிகைகளின் ஆசை நிறைவேறிவிட்டது. நயன்தாரா, திரிஷா, தமன்னா, அசின் உள்ளிட்ட பலர் ஜோடியாக நடித்து விட்டனர். தனக்கும் அஜீத் ஜோடியாக நடிக்க ஆசை உள்ளது என்று ஹன்சிகா தெரிவித்தார். இது குறித்து அவர் கூறும் போது,

‘நான் அஜீத்தின் தீவிர ரசிகையாக இருக்கிறேன். அவருக்கு ஜோடியாக ஒரு படத்திலாவது நடித்து விடவேண்டும் என்பது எனது கனவாக இருக்கிறது. அந்த வாய்ப்புக்காக காத்துக் கொண்டு இருக்கிறேன் என்றார். அஜீத்தை வைத்து படம் எடுக்கும் டைரக்டர்களுக்கும் ஹன்சிகா தன்னை ஜோடியாக்கும்படி வற்புறுத்தி தூது அனுப்பி இருக்கிறாராம்.

Comments