காதல் கதையை திகிலாக சொல்லும் புதுமுக இயக்குனர்!!!

30th of September 2014
சென்னை:சமீபமாக திகில் படங்களுக்கு ஏக வரவேற்பு கிடைத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக அடுத்து வெளி வர உள்ள படம் 'ஆலமரம்'.

இயக்குனர்  பாக்கியராஜிடம் இணை இயக்குனராக பணியாற்றிய எஸ்.என் .துரைசிங், என்ற புதுமுக இயக்குனர் இப்படத்தை இயக்குகிறார்.


படம் குறித்து கூறிய துரைசிங், "பொதுவாக திகில் படங்களில் வரும் அந்நிய வாடை என் படத்தில் இருக்காது. நம் மண்ணின் மனதை சார்ந்த ஒரு காதல் கதையை தான் நான் திகில் கலந்து சொல்லி இருக்கேன். இது எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும். புதிய இசை அமைப்பாளர் ராம்ஜீவன், அவர்களின் இசையில் வெளிவந்து பிரபலமான இந்த படத்தின் பாடல்கள் படத்துக்கு பெரும் விளம்பர வரவேற்பை பெற்று தந்துள்ளது." enRaar.

அக்டோபர் மாதம் இரண்டாவது வாரத்தில் 'ஆலமரம்' வெளி வர தயாராக உள்ளது.

Comments