ஐ’ டீஸரை திருட்டுத்தனமாக எடுத்து வெளியிட்ட விஷமிகள்!!!

3rd of September 2014
சென்னை:ஷங்கரின் பிரம்மாண்டமான இயக்கத்தில், விக்ரமின் கடுமையான உழைப்பில், தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரனின் மிகப்பெரிய பட்ஜெட்டில் ரத்தம் சிந்தி உருவாக்கப்பட்டிருக்கிறது ‘ஐ’ திரைப்படம். இப்படத்தின் டீஸரை இந்தியாவின் முக்கிய பத்திரிகையாளர்களுக்கும், பிரபல விநியோகஸ்தர்களுக்கும் போட்டுக் காண்பிப்பதற்காக கொஞ்சம் முன்கூட்டியே டீஸரை உருவாக்கி வைத்திருந்தது தயாரிப்பு நிறுவனம்.

சமீபத்தில் அவர்களுக்கு இந்த டீஸர் போட்டுக் காண்பிக்கப்பட்டது. இந்த டீஸரைப் பார்த்த ஒவ்வொருவரும் ஆச்சரியத்தில் திகைத்துப் போனார்கள். ஹாலிவுட்டிற்கு இணையாக ‘ஐ’ படம் உருவாக்கப்பட்டுள்ளது என இணையதளங்களில் இந்த டீஸரைப் பற்றியும் புகழ்ந்து தள்ளினார்கள். ஆனால், இவர்களின் உழைப்பை திருட்டுத்தனமாக யாரோ ஒரு விஷமி செல்போன் கேமராவில் பதிவு செய்து அதை இணையதளத்தில் பதிவேற்றம் செய்திருக்கிறார். இப்படி வெளியிடப்பட்ட டீஸர் துல்லியமாக இல்லாவிட்டாலும், விக்ரம் பல தோற்றங்களில் வருவது அதில் நன்றாகவே தெரிகிறது.

தமிழ் சினிமாவை உலக அரங்கில் பேச வைப்பதற்காக ஒரு பெரிய டீம் 2 வருடங்களுக்கும் மேலாக உழைப்பைக் கொட்ட, அதை 2 நிமிடங்களில் திருடி வெளியிட இவர்களுக்கு எப்படிதான் மனம் வருகிறதோ!

Comments