16th of September 2014சென்னை:சென்னை வந்துள்ள ஹாலிவுட் நடிகர் அர்னால்டைச் சந்தித்து படமெடுத்துக் கொண்டார் நடிகர் சூர்யா.
விக்ரம் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘ஐ' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறுகிறது.
இவ்விழாவில் பங்கேற்பதற்காக ஹாலிவுட் நடிகர் அர்னால்டு சென்னை வந்துள்ளார். விழாவில் கலந்து கொள்ளும் முன் தமிழக முதல்வர் ஜெயலலிதாவைச் சந்திக்கிறார் அர்னால்ட்.
அதற்கு முன் அர்னால்டைச் சந்திக்க தமிழக நடிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நடிகர் சூர்யா இன்று பிற்பகல் அர்னால்டைச் சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
Comments
Post a Comment