மங்கள்யான் வெற்றி - நடிகர் நடிகைகள் வாழ்த்து!!!

27th of September 2014
சென்னை:மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்ட பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதற்காக, இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும் இது குறித்து நடிகர், நடிகைகளும் இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை சமூக வலைதளங்களின் மூலமாக தெரிவித்துள்ளனர்.

நடிகை குஷ்பு கூறும் போது, மங்கள்யான் செவ்வாய் கிரகத்தை அடைந்து இருப்பது ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமையான விஷயம் ஆகும். இந்த வெற்றியை கொண்டாடும் இந்த தருணத்தில் இதற்கு பின்னால் இருந்த அத்தனை பேருக்கும் எனது வணக்கங்கள் என்றார்.

நடிகை அமலாபால் வெளியிட்ட கருத்தில் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட மங்கள்யான் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று உள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகளுக்கு அனைத்து இந்தியர்கள் சார்பில் பாராட்டு தெரிவிக்கிறேன். மங்கள்யான் வெற்றிக்கு பின்னணியில் இருந்த அனைவருக்கும் வணக்கங்கள் என்று குறிப்பிட்டு உள்ளார்.

நடிகை ஸ்ரீதேவி கூறும் போது மங்கள்யான் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டு உள்ளது. இதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகளை வாழ்த்துகிறேன் என்றார்.

நடிகர் சிவகார்த்திகேயன் கூறும் போது, மங்கள்யான் வெற்றி இந்தியர்களை பெருமைபட வைத்துள்ளது. விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள் என்றார்.

Comments