எக்ஸ்ட்ராடினரி ஸ்கிரீன் பிரசன்ஸ் - மகேஷ்பாபுவை புகழ்ந்த ஷங்கர்!!!

2nd of September 2014
சென்னை:மகேஷ்பாபு ஸ்ரீனி வைட்லா இயக்கத்தில் நடித்துள்ள படம் ஆகடு. இதன் ஆடியோ வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் கடந்த சனிக்கிழமை நடந்தது. சிறப்பு விருந்தினராக ஷங்கர் கலந்து கொண்டார்.

விழாவில் பேசிய அவர், மகேஷ்பாபுவின் படங்களை முன்பு பார்ப்பதில்லை என்றும், ஒக்கடு படத்துக்குப் பிறகு அது மாறியது. தொடர்ந்து அவரது படங்களை பார்த்து வருவதாக கூறினார். மகேஷ்பாபுவின் ஸ்கிரீன் பிரசன்ஸ் எக்ஸ்ட்ராடினரி என்றும் புகழ்
 
ந்தார்.

ஆகடுக்கு தமன் இசையமைத்துள்ளார். தமனை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் ஷங்கர். தமனின் ட்ரம்ஸ் வாசிக்கும் திறமையைப் பார்த்தே அவரை பாய்ஸ் படத்தில் நடிக்க வைத்ததாகவும், அவர் இன்று இப்படியொரு நிலையில் இருப்பது பெருமையாக இருப்பதாகவும் ஷங்கர் கூறினார்.

விழாவில் நாசரும் கலந்து கொண்டார்.

Comments