1st of September 2014
சென்னை:பர்மா என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது ஒன்று ஒரு காலத்தில் உலகப்போரின்போது திரும்பி வந்த அகதிகள்.. இன்னொன்று பர்மா பஜார்.. ஆனால் இந்த இரண்டுக்கும் சம்பந்தம் இல்லாமல் ‘பர்மா’ என்கிற பெயரில் ஒரு படத்தை இயக்கியுள்ளார் அறிமுக இயக்குனரான தரணிதரன்.
நளனும் நந்தினியும் படத்தில் நடித்த மைக்கேல் கதாநாயகன் ‘பர்மா’வாக நடிக்க அவருக்கு ஜோடியாக ரேஷ்மி மேனன் நடித்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசைப்பள்ளியில் இருந்து உருவான சுதர்சன் எம்.குமார் என்பவர் இந்தப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். வரும் செப்-12ஆம் தேதி படம் வெளியாகிறது.
அப்படி என்ன கதை..? அதாவது லோன் போட்டு கார் வாங்கியவர்களில் பலர் ஒரு கட்டத்தில் தவணை பணம் கட்டமுடியாமல் விழி பிதுங்கி நிற்பார்கள் இல்லையா..? அப்போது அவர்ர்களுக்கு கடன் கொடுத்த நிறுவனங்கள் காரை சீஸ் பண்ணி எடுத்துக்கொண்டு போவார்கள்…
இப்படி காரை சீஸ் பண்ணித் தருவதற்கென்றே ஆட்கள் இருக்கிறார்கள். இப்படி நடப்பதும் கூட நமக்கு தெரியும்.. ஆனால் அவர்களுக்குள் நடக்கும் போட்டி, துரோகங்கள், யார் அதிக காரை சீஸ் செய்வது என்கிற பந்தயம் எல்லாமும் உண்டு என்பது நமக்கு தெரியாத ஒன்று..
அதைத்தான் ‘பர்மா’வாக்கி இருக்கிறார் இயக்குனர் தரணிதரன்.. கதையின் நாயகனான ‘பர்மா’ என்பவர் இப்போதும் உயிருடன் இருக்கிறார். அவரிடம் முறையான அனுமதி வாங்கித்தான் அவரது பெயரையும் கேரக்டரையும் பயன்படுத்தி இருக்கிறார்களாம்.
Comments
Post a Comment