23rd of September 2014
சென்னை:மலேசியா மற்றும் அரபு நாடுகளில் விதார்த் படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
விதார்த், கார்த்திகா ஷெட்டி ஜோடியாக நடித்துள்ள படம் ‘ஆள்’. அரவிந்த கிருஷ்ணா இயக்கியுள்ள இப்படத்தை விடியல் ராஜூ , தயாரித்திருப்பதுடன், வில்லனாகவும் நடித்துள்ளார்.
கடந்த 19ஆம் தேதி இப்படம் தமிழகம் முழுவதும் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும், இப்படத்தை வெளி நாடுகளிலும் வெளியிட தயாரிப்பாளர் விடியல் ராஜு திட்டமிட்டார்.
ஆனால், படத்தை பார்த்த அதிகாரிகள் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்கள் படத்தில் இருப்பதாக கூறி அனுமதி மறுத்து ரிலீஸ் செய்ய தடை விதித்து விட்டனர்.
இது குறித்து விடியல் ராஜூ கூறுகையில், "இந்தியில் வெற்றி பெற்ற அமீர் என்ற படத்தை ‘ஆள்’ என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளேன். இது தரமான படம். முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்கள் எதுவும் இப்படத்தில் இல்லை. மலேசியா மற்றும் அரபு நாடுகளில் இந்த படத்துக்கு தடை விதித்திருப்பது துரதிர்ஷ்டமானது. தடையை நீக்க போராடுவேன்." என்றார்.

Comments
Post a Comment