30th of September 2014
சென்னை:சூது கவ்வும்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நலன் குமாரசாமி. இதில் கதாநாயகனாக விஜய் சேதுபதியும் இவருக்கு ஜோடியாக சஞ்சிதா செட்டியும் நடித்திருந்தனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.
வித்தியாசமான கதையும் விறுவிறுப்பான திரைக்கதையும் கொண்டு வெளியான இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நலன் குமாரசாமி எந்த நடிகரை வைத்து எப்படிப்பட்ட படத்தை இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
பிறகு மீண்டும் விஜய் சேதுபதி அல்லது சூர்யாவை வைத்து படம் எடுக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியது. ஆனால் தற்போது கௌதம் கார்த்திக்கை வைத்து படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைப்பற்றி விசாரிக்கும் போது, சூர்யாவுடன் இணைந்து படம் எடுக்கும் சூழல் அமையவில்லை என்றும், விஜய் சேதுபதி பல படங்களில் நடித்து வருவதால் கால்ஷீட் பிரச்சனை ஏற்படும் என்றும் நலன் தரப்பில் கூறப்படுகிறது.

Comments
Post a Comment