26th of September 2014
சென்னை:சவாலே சமாளி’.. நடிகர் திலகம் சிவாஜி நடித்த சூப்பர்ஹிட் படத்தின் டைட்டில் இது. தற்போது இந்த டைட்டிலைத்தான், தான் இயக்கிவரும் புதிய படத்திற்கு வைத்திருக்கிறார் ‘கழுகு’ மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்த இயக்குனர் சத்யசிவா. இந்தப்படத்தில் ‘தெகிடி’ ஹீரோ அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் பிந்துமாதவி.
தமன் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். ஜூன் மாதமே இதன் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் ஒரு பாடல் காட்சிக்காக ஸ்விட்சர்லாந்து செல்லவிருக்கிறார்களாம். அனேகமாக இந்தமாத இறுதியில் படப்பிடிப்பு முடிவடைந்துவிடும் என்று சொல்லப்படுகிறது.

Comments
Post a Comment