காந்தி ஜெயந்தி அன்று கண்ணன் படம் ரிலீஸ்!!!

7th of September 2014
சென்னை:சொன்ன கதையை, அப்படியே இம்மி பிசகாமல் படம் எடுப்பவர், சொன்னா நாட்களில், சொன்ன பட்ஜெட்டில் படம் எடுப்பவர் இயக்குனர் ஆர்.கண்ணன்.. அதனாலேயே இவரது படங்கள் எல்லாமே எந்த ஒரு பிரச்சனையுமின்றி சொன்ன தேதியில் வெளியாகியும் வந்திருக்கின்றன. இப்போது விமல், பிரியா ஆனந்த், சூரி ஆகியோரை வைத்து கண்ணன் இயக்கியுள்ள படம் ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’.

டி.இமான் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் தான் நடைபெற்றது. லேட்டஸ்ட் தகவலாக, படத்தை அக்-2ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று பிரமாண்டமாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள். ‘நாடோடிகள்’ படத்தை தயாரித்த மைக்கேல் ராயப்பன் தான் இந்தப்படத்தை தயாரித்துள்ளார்.

Comments