23rd of September 2014
சென்னை:என் முகத்தில் தனுஷ் குத்துவிட்டார் என்றார் பாலிவுட் நடிகை.‘இஷ்க் இந்தி படத்தில் நடித்தவர் அமைரா தஸ்தர். தமிழில் தனுஷ் ஜோடியாக ‘அனேகன்‘ படத்தில் நடிக்கிறார். இதுபற்றி அமைரா கூறியது:
சென்னை:என் முகத்தில் தனுஷ் குத்துவிட்டார் என்றார் பாலிவுட் நடிகை.‘இஷ்க் இந்தி படத்தில் நடித்தவர் அமைரா தஸ்தர். தமிழில் தனுஷ் ஜோடியாக ‘அனேகன்‘ படத்தில் நடிக்கிறார். இதுபற்றி அமைரா கூறியது:
இந்தியில் இஷ்க் என்ற படத்தில் நடித்துமுடித்து அப்படத்தின் புரமோஷன் வேலையில் இருந்தேன். அப்போது என்னை சந்தித்த இயக்குனர் கே.வி.ஆனந்த் ‘அனேகன்‘ படத்தில் நடிக்க கேட்டார். நான் நடித்த முதல் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே எனக்கு இந்த வாய்ப்பு வந்தது. கதை கேட்டபோது அசந்துவிட்டேன். உடனே நடிக்க ஒப்புக்கொண்டேன். தமிழ் எனக்கு முற்றிலும் புதிய மொழி. பேசத் தெரியாத மொழியில் எப்படி நடிக்கப்போகிறோமோ என்று தயங்கினேன்.
ஷூட்டிங் ஸ்பாட்டில் இயக்குனர் கே.வி.ஆனந்த் வசனங்களின் அர்த்தம் சொல்லி நடிக்க வைத்தார். இணை இயக்குனர்கள் மும்பை சேர்ந்த தமிழ் பேசுபவர்களாக செட்டில் இருந்தார்கள். அவர்களிடம் தமிழில் பேசி எனது தமிழை வளர்த்துக்கொண்டேன். என்னென்ன கெட்டவார்த்தைகளில் திட்டுவார்கள் என்பதையும் அவர்கள் சொல்லிக்கொடுத்தனர்.
சண்டைகாட்சி ஒன்றில் தனுஷ் பின்னால் நின்றிருந்தேன். அப்போது அவர் கையை பின்பக்கம்இழுத்து எதிரிகளை குத்த வேண்டிய காட்சியில் அருகில் இருந்த என் முகத்தில் குத்து விழுந்தது. தவறுதலாக நடந்த இந்த செயலை கண்டு பதறினார் தனுஷ். இந்த சம்பவத்துக்காக அவர் என்னிடம் மன்னிப்பு கேட்டார். இவ்வாறு அமைரா கூறினார்.
Comments
Post a Comment