4th of September 2014
சென்னை:த்ரிஷா இன்று வரை இளவட்ட ரசிகர்களின் இதயங்களில் ஜெஸி என்ற பெயரில்
உலவிக்கொண்டிருக்கிறார் என்றால் அதற்கு காரணகர்த்தா கெளதம்மேனன்தான்.
விண்ணைத்தாண்டி வருவாயா என்ற கிளாஸ் படத்தில் த்ரிஷாவை புடவை கெட்டப்பில்
ஜொலிக்க வைத்தார். அதனால் அந்த த்ரிஷாவை மறுபடியும் பார்க்க மாட்டோமா என்று
ஏங்கிக்கொண்டிருக்கிற ரசிகர்களை மீண்டும் சந்தோசப்படுத்தும் நோக்கத்துடன்
அதே புடவை த்ரிஷாவை இப்போது அஜீத்தைக்கொண்டு தான் இயக்கும் படத்திலும்
இன்னும் கலர்புல்லாக ஜொலிக்க வைத்து வருகிறார் கெளதம்.
இதனால்,
சந்தோசத்தில் திக்குமுக்காடிப்போயிருக்கிறார் த்ரிஷா. மார்க்கெட்
அவுட்டாகப்போகிறது என்கிற நேரத்தில் மீண்டும் கெளதம்மேனன் அஜீத்துடன் தன்னை
ஜோடி சேர வைத்திருப்பதால் அவருக்கு நேரில் மட்டுமின்றி தனது டுவிட்டரின்
மூலமும், நன்றிகளை தெரிவித்துள்ளார் த்ரிஷா.
மேலும்,
த்ரிஷாவின் இந்த அதிகப்படியான சந்தோசத்திற்கு காரணம், விநாயகர்
சதுர்த்தியின்போது அஜீத்தின் இளமையான கெட்டப்புடன் த்ரிஷாவும் புடவை
தேவதையாக தோன்றிய காட்சிகளைப்பார்த்த ரசிக கோடிகள் அவர்களின்
ஜோடிப்பொறுத்தத்தை புகழ்ந்து தள்ளி விட்டார்களாம். எங்கள் தல இதுவரை நடித்த
ஹீரோயினிகளில் அவருடன் அதிக படங்களில் நடித்தவர் என்பதோடு அவருக்கு
மிகப்பொருத்தமான ஒரே நடிகை த்ரிஷா மட்டுமே என்றும் அஜீத்தின் ரசிகர்கள்
இணையதளம் மூலம் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு வருகிறார்களாம்.
அஜீத் ரசிகர்களின் இந்த வாழ்த்துக்களால் உச்சகட்ட சந்தோசத்தில் மிதந்து கொண்டிருக்கிறார் த்ரிஷா.
Comments
Post a Comment