இந்தியாவை தனி ஒரு மனிதனாக இருந்து காப்பாற்றப்போகிறேன் : விஜய் ஆண்டனி சபதம்!!!

4th of September 2014
சென்னை:இசையமைப்பாளராக வெற்றிப் பெற்ற விஜய் ஆண்டனி, தற்போடு ஹீரோவாக வெற்றி பெற்றுள்ளார். நான் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான விஜய் ஆண்டனி, அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘சலீம்’ என்ற படத்தில் நடித்து வந்தார். சமீபத்தில் வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அனைத்து தரப்பினருக்கும் பிடித்தமான படமாக அமைந்துள இப்படம் வசூலிலும் சாதனைப் படைத்து வருகிறது. இதை கொண்டாடும் விதத்தில் இன்று பத்திரிகையாளர்களை சலீம் படக்குழுவினர் சந்தித்தனர்.

அப்போது வெற்றி குறித்து பேசிய விஜய் ஆண்டனி, “இந்த வெற்றி சலீம் பட இயக்குநர் நிர்மல்குமாருக்கு சொந்தமானது. நான் இந்த வெற்றியின் மூலம் பெரிய சாதனை எதையும் செய்யவில்லை. இன்னும் நான் போக வேண்டிய தூரம் இருக்கிறது. தொடர்ந்து நல்ல படங்களையே ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். அப்படி நான் நடித்து தயாரித்த படம், எனக்கே திருப்தியில்லை,


இதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று நினைத்தேன், என்றால் அப்படத்திற்காக எவ்வளவு பணம் செலவு செய்திருந்தாலும் சரி, அந்த படத்தை ரிலீஸ் செய்யாமல் நிறுத்திவிட வேண்டும் என்று நான் நினைத்திருக்கிறேன். ஒரு காலாவதியான மருந்தை நாம் வாங்குவோமா, அது போல தான், நல்ல படம் இல்லை என்று எனக்கு தோன்றினால் அந்த படத்தை நான் ரசிகர்களுக்கு கொடுக்க மாட்டேன்.” என்றார்.

சலீம் படத்திற்குப் பிறகு விஜய் ஆண்டனி நடிப்பில் ‘இந்தியா பாகிஸ்தான்’ படம் வெளியாக உள்ளது. இப்படம் குறித்து நிருபர் ஒருவர் கேட்டதற்கு, “இந்தியாவை நான் எப்படி காப்பாற்றுகிறேன் என்பதை சொல்ல போகிறோம் சார், நான் தனி ஒருவனாக இருந்து இந்தியாவை காப்பாற்றுவதை தான் அப்படத்தில் பார்க்க போகீறீர்கள், அதற்காக ஒரு நாட் அப்படத்தில் உள்ளது, அதை இப்போது சொல்லிவிட்டால், கதை தெரிந்துவிடோம்.” என்று நகைச்சுவையாக பதில் அளித்த விஜய் ஆண்டனி, விரைவில் தனது அடுத்தடுத்தப் படங்களைப் பற்றி அறிவிப்பதாக கூறினார்.

Comments