25th of September 2014
சென்னை::மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த ஆயரத்தில் ஒருவன் படம் மீண்டும் டிஜிட்டலில் வெளியாகி வெள்ளிவிழா கொண்டாடியது. அந்த வரிசையில் அடுத்து வெளிவர இருக்கிறது உலகம் சுற்றும் வாலிபன். 1973ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தை எம்.ஜி.ஆர். இயக்கி தயாரித்திருந்தார்.
லதா, மஞ்சுளா, நம்பியார், அசோகன், சந்திரகலா இவர்களுடன் தாய்லாந்து நடிகை ஒருவரும் நடித்திருந்தார். எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையில் உருவான பாடல்கள் பெரிய அளவில் ஹிட்டானது.
பெரிய பட்ஜெட்டில் சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் நாடுகளில் எடுக்கப்பட்ட படம். அன்றைய ஆளும் கட்சியின் கெடுபிடிகளுக்கு இடையில் பல தடைகளை தாண்டி வெளிவந்து வெள்ளி விழா கொண்டாடிய படம்.
தற்போது இந்தப் படத்தை நவீன முறையில் டிஜிட்டல் படுத்தி வெளியிட இருக்கிறார்கள். திண்டுக்கலை சேர்ந்த சோலைமலை நாகராஜன் இதனை வெளியிடுகிறார். அடுத்த மாதம் முதல் தியேட்டரில் டிரைலர்கள் திரையிடப்படுகிறது. -
Comments
Post a Comment