5th of September 2014
சென்னை:தல 55’ படத்தில் அஜித்துடன் முக்கிய வேடமொன்றில் நடித்து வருகிறார் விவேக். ‘மின்னலே’ படத்திற்குப் பிறகு மீண்டும் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்கும் விவேக், இப்படத்தில் தன்னை இயக்குனர் பயன்படுத்திய விதம் குறித்து ட்விட்டரில் புகழ்ந்து எழுதியிருக்கிறார்.
அதில் அவர், ‘‘இப்படித்தான் நடிக்கணும் என கௌதம் எப்போதும் சொல்லிக்கொடுப்பதில்லை. உங்களுடைய இயல்பான ஸ்டைலில் நடிக்கவிட்டு, அதை ரசிப்பார். அதன் பிறகே அதில் கருத்துக்கள் சொல்வார். இதை நான் சௌகரியமாக இருப்பதைப்போல் உணருகிறேன். அவர் மிகச்சிறந்த நபர்!’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
அஜித்துடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ள விவேக், கடைசியாக அவருடன் நடித்தது விஜய்யின் இயக்கத்தில் வெளிவந்த ‘கிரீடம்’ படத்தில். நாயகனாக களமிறங்கிய பின்னர், குறிப்பிட்ட படங்களில் மட்டுமே காமெடியனாக கவனம் செலுத்தி வருகிறார் விவேக்.

Comments
Post a Comment