20th of September 2014
சென்னை:சின்னத்திரையில் பல்வேறு நிகழ்சிகளின் மூலம் பரிச்சியமான கோகுல், 'ஆ' என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் நடிகராக அறிமுகமாகிறார்.
விரைவில் வெளியாக உள்ள 'ஆ' படத்திற்குப் பிறகு தமிழ் சினிமாவில் தனக்கும் ஒரு இடம் கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பில் உள்ள கோகுல், யுனி சைக்கிளிங், ஜாக்ளிங் ஆகிய திறன்களில் சோபிக்க கூடியவர். மேலும், பல்வேறு நாடுகளுக்கு கலை நிகழ்ச்சி நடத்த சென்று வந்த கோகுல், அந்த நாட்டு மேடை கலைஞர்களின் திறமைகளை கண்டு தன் நடிப்பை மெருகேற்றி கொண்டு இருக்கிறாராம்.
அம்புலி படத்தில் தனது முகத்தைக் காட்டாமல், தனது திறமையை காட்டிய கொகூளுக்கு, அதே படக்குழுவினர் இயக்கியுள்ள 'ஆ' படத்தில் திறமையுடன், முகத்தையும் காட்டும் வாய்ப்பை கொடுத்துள்ளனர்.
ஆ படம் குறித்து குறிய கோகுல், "இரட்டை இயக்குனர்கள் ஹரி மற்றும் ஹரிஷுக்கு என் மனமார்ந்த நன்றி. என் மேல் நம்பிக்கை வைத்து எனக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தமைக்கு தயாரிப்பாளர்கள் வீ . லோகநாதன் , வீ. ஜெகநாதன் மற்றும் ஸ்ரீனிவாஸ் லோகநாதன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த படத்தை தொடர்ந்து எம் எஸ் ஜி மூவிஸ், நிறுவனத்தாருடன் ஷங்கர் பிரோஸ். நிறுவனம் இணைந்து தயாரிக்கும் 'ஜம்போ 3 டி ' என்ற படத்தில் நடிக்க உள்ளேன். இந்த படத்தின் படப்பிடிப்பு 90 சதவீதம் ஜப்பானில் நடக்க உள்ளது. இந்த படம் குழந்தைகளுக்கு நிச்சயமாக பிடிக்கும். என் பலமே என் தன்னம்பிக்கை தான். என் வெற்றிக்கு நான் இந்த அளவுக்கு வளர காரணமான கலா மாஸ்டருக்கு என் உளமார்ந்த நன்றி. சின்ன திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்துள்ள மற்ற நட்சத்திரங்கள் போலவே நானும் மின்னுவேன்." என்று தெரிவித்தார்.

Comments
Post a Comment