ஷங்கர் படத்தில் நடிக்க நான் ரெடி - அர்னால்டு பேச்சு!!!

16th of September 2014
சென்னை:ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஐ'. ஆஸ்கார் ரசிச்ஹ்காந்திரன் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். கபிலன், கார்கி ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.

இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு, ரஜினிகாந்த், கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் அனிருத், ஐ படத்தில் தான் பாடிய, "மெர்சலாயிட்டேன்...." என்ற பாடலைப் பாடினர். பாடகர் ஹரிச்சரண் இரண்டு பாடல்களை பாடினர். ஏ.ஆர்.ரஹ்மான், ஒரு பாடலுக்கு பியானோ வாசித்தார். மேலும் நடிகர் விக்ரம், ஐ படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலுக்கு, படத்தில் போட்ட வித்தியாசமான கெட்டப்பை போட்டுக்கொண்டு மேடையில் நடனாம் ஆடினார்.

அதிக நேரமானதால், இசை வெளியீட்டுக்கு முன்பாகவே அர்னால்டு கிளம்பிவிட்டார். கிளம்புவதற்கு முன்பாக நிகழ்ச்சியில் பேசிய அர்னால்டு, "ஐ படத்தின் இசை வெளியீட்டு விழாவும், படமும் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இயக்குனர் ஷங்கர் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தாள் நான் கண்டிப்பாக நடிப்பேன், அவருடைய அடுத்தப் படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுப்பார் என்று நம்புகிறேன். இந்த படம் வெற்றி பெற எனது வாழ்துகள்." என்றார்.

ரஜினிகாந்த் பேசுகையில், "ஷங்கரின் முதல் படத்திலிருந்து இந்த படம் வரை, அவர் படத்திற்கு படம் முன்னேற்றத்தைக் கண்டு வருகிறார். இந்திரன் படத்தைக் காட்டிலும் ஐ படத்தை மிக பிரமிப்பாக இயக்கியிருக்கிறார். ஐ படத்திற்குப் பிறகு அவர் இயக்கம் படத்திற்கு இன்னும் பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கும் அதையும் அவர் பூர்த்தி செய்வார். ஒரு சீனியர் நடிகராக விக்ரமைப் பற்றி பேசும் போது, அவரை நினைத்து பெருமையடைகிறேன். நடிப்புக்ககா தன்னை வருத்திக்கொண்டு நடிக்கும் விக்ரமின் நடிப்பு இந்த படத்திலும் பிரம்மாண்டமாக இருக்கிறது. படத்திற்கு மக்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. படம் கண்டிப்பாக பெரிய வெற்றி பெறும்." என்றார்.

இந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார், லதா ரஜினிகாந்த், செளந்தர்யா ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், சிபி ராஜ், பவர் ஸ்டார் ஸ்ரீநிவாசன், நடிகை ராய் லட்சுமி ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

பின்னணி பாடகி சின்மயியும், நடிகர் பாபி சிம்ஹாவும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள்
.

Comments