பாலிவுட் ஹீரோயின்களை ஆட்டுவிக்க அனுஷ்கா முடிவு!!!

29th of September 2014
சென்னை:பாலிவுட் ஹீரோயின்களை ஆட்டுவிக்க முடிவு செய்திருக்கிறார் அனுஷ்கா.கோலிவுட்டிலிருந்து அசின், காஜல் அகர்வால், திரிஷா, இலியானா, டாப்ஸி, எமி ஜாக்ஸன், தமன்னா என வரிசையாக பாலிவுட்டுக்கு படை எடுத்தனர். இவர்களில் அசின், இலியானா ஹிட் படங்களை கொடுத்து பாலிவுட் டாப் ஹீரோயின்களுக்கு கிலி ஏற்படுத்தினர். அது நீடிக்கவில்லை. குறுகிய காலத்திலேயே பிரியங்கா சோப்ரா, வித்யாபாலன், சோனாக்ஷி சின்ஹா, அலியாபட் என இளம் ஹீரோயின்கள் மார்க்கெட்டை தக்க வைத்துக்கொண்டனர்.

இவர்களில் அசின் மீண்டும தென்னிந்திய படங்களில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. அனுஷ்காவுக்கும் நிறைய பாலிவுட் வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தது. தென்னிந்திய படங்களிலேயே பிஸியாக இருந்ததால் இந்தி படங்களை ஏற்கவில்லை. இந்நிலையில் இயக்குனர் இ.நிவாஸின் ‘அமன் கி ஆஷா என்ற படத்தில் அனுஷ்கா நடிக்க உள்ளார். இதுபற்றி நிவாஸ் கூறியதாவது:

அனுஷ்காவுக்கு என் படத்தின் ஸ்கிரிப்ட் சொன்னேன். அவருக்கு பிடித்திருந்தது. இப்படம் தொடர்பான பேச்சுவார்த்தை தொடக்கத்தில்தான் இருக்கிறது. எதுவும் முடிவு செய்யப்படவில்லை. அனுஷ்கா டாப் ஹீரோயின். அவர் என்னுடைய படத்துக்கு பொருத்தமாக இருப்பார் என்பதால் அவரை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்தேன். இப்படத்துக்கு ‘ஜுவெனில் என்று பெயரிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Comments