எந்தவித கட்டும் இல்லாமல் 'யு' சான்றிதழ் பெற்ற 'களவு தொழிற்சாலை'!!!

21st of September 2014
சென்னை:எம்.ஜி.கே மூவி மேக்கர் சார்பில் எஸ்.ரவிசங்கர் தயாரித்துள்ள படம் 'களவு தொழிற்சாலை'. தி.கிருஷ்ணசாமி இயக்கியுள்ள இப்படம் சர்வதேச சிலை கடத்தலை மையமாக வைத்து புதிய கதைக்களத்தில் உருவாகியுள்ளது.

ஒரு சர்வதேச சிலை கடத்தல்காரன் எப்படி தனது புத்திசாலித்தனத்தை உபயோகித்து தமிழ்நாட்டில் பழம்பெருமை வாய்ந்த பலகோடி மதிப்புள்ள சிலையை கடத்துகிறான் என்பதை, இப்படத்தில் இயல்பாக சித்தரித்துள்ளனர்.


சமீபத்தில் இப்படம் தணிக்கை குழு அதிகாரிகளுக்கு போட்டுக்காட்டப்பட்டது. சொல்ல வந்த விஷயத்தை மிகவும் ஆழமாக சொல்லியிருக்கிறீர்கள், என்று பாராட்டிய தண்ணிக்கை குழுவினர், எந்தவித கட்டும் இல்லாமல் படத்திற்கு 'யு' சான்றிதழ் கொடுத்துள்ளனர்.

'களவு தொழிற்சாலை' விரைவில் வெளியாக உள்ளது.

Comments