காவ்யா மாதவன்-திலீப்பை கலங்கடிக்கும் கல்யாண ரூமர்!!!

16th of September 2014
சென்னை:திலீப்-காவ்யா மாதவன் திருமண கிசுகிசு  இருவரையும் கலங்கடித்துள்ளது.தமிழில் விஜயகாந்த் நடித்த ‘ராஜ்ஜியம்‘ படத்தில் அவரது தம்பியாக நடித்தவர் திலீப்.  ‘காசி‘, ‘என் மன வானில்‘ படங்களில் ஹீரோயினாக நடித்தவர் காவ்யா மாதவன். இவர்கள் இருவரும் மலையாளத்தில் நிறைய படங்களில் ஜோடியாக நடித்து வெற்றி  ஜோடி என பெயர் பெற்றிருக்கின்றனர். அப்போதே இவர்களுக்குள் காதல் என்று கிசுகிசு உலவி வந்தது. இந்நிலையில் திலீப் நடிகை மஞ்சுவாரியரை மணந்தார். காவ்யா மாதவன் வினோத் என்பவரை மணந்தார். திலீப்-மஞ்சுவாரியர் வாழ்க்கையில் திடீர் என புயல் வீசியது.
 காவ்யா மாதவனோடு திலீப் இணைத்து  கிசுகிசுக்கப்பட்டதால் அடிக்கடி கணவன்-மனைவிக்குள் தகராறு எழுந்தது. திருமணத்துக்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டிருந்த மஞ்சுவாரியர் மீண்டும் நடிக்க முடிவு செய்தார். இது திலீப்புக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அவரது பேச்சை மீறி மஞ்சுவாரியர் மீண்டும் நடிக்க வந்தார். இதையடுத்து இருவருக்குள் பிளவு ஏற்பட்டது. விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.


அது நிலுவையில் உள்ளது.இதேபோல் காவ்யா மாதவன்-வினோத் தம்பதிகளுக்குள்ளும் மனக்கசப்பு ஏற்பட்டது. இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இந்தநிலையில்தான் திலீப்-காவ்யா மாதவனை திருமணம் செய்ய உள்ளதாக மல்லுவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த வதந்தி இப்போது மேலும் அதிகரித்து, இருவரின் குடும்பத்திலும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளதுடன் இருவரின் சினிமா வாழ்க்கையையும் கலங்கடித்துள்ளது.

Comments