8th of September 2014
சென்னை:ஆர்யாவின் தம்பி சத்யா நடிப்பில் கடந்த வாரம் ‘அமர காவியம்’ படம் வெளியானது. தனது ‘தி ஷோ பீப்பிள்’ நிறுவனம் மூலம் இப்படத்தைத் தயாரித்திருந்தார் ஆர்யா. ரசிகர்களிடம் நல்ல பெயர் வாங்கியிருக்கும் இப்படத்தைத் தொடர்ந்து ‘சென்னை சிங்கப்பூர்’ என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார் சத்யா. ‘சிங்கப்பூர் & கோடம்பாக்கம்’ கூட்டு முயற்சியில் உருவாகும் இப்படத்தை அப்பாஸ் அக்பர் இயக்குகிறார்.
அமர காவியம்’ படத்தைத் தொடர்ந்து இப்படத்திற்கும் இசையமைக்கிறார் ஜிப்ரான். பிரவீன்.கே.எல் எடிட்டிங் செய்ய, ஒளிப்பதிவை முகேஷ் கவனிக்கிறார். ‘மீடியா டெவலப்மென்ட் அத்தாரிட்டி சிங்கப்பூர்’ நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. கதாநாயகி உள்ளிட்ட மற்ற நட்சத்திரங்களின் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும்.
Comments
Post a Comment