சி.பி.ஐ அதிகாரியாக புரமோஷன் ஆனார் ப்ரியாமணி!!!

26th of September 2014
சென்னை:ப்ரியாமணிக்கு தமிழ்சினிமாவில் தான் பட வாய்ப்புகள் இல்லை. ஆனால் தெலுங்கிலும் கன்னடத்திலும் தலா ஒரு படத்திலும் மலையாளத்தில் இரண்டு படங்களிலும் நடித்துக்கொண்டு இருக்கிறார். இதில் குறிப்பாக கன்னடத்தில் தயாராகி வரும் ‘வியூகம்’ என்ற படத்தில் சி.பி.ஐ அதிகாரியாக நடிக்கிறார் ப்ரியாமணி..
அரசியல் கதைக்களத்தில் உருவாகிவரும் இந்தப்படத்தில் காயத்ரி ராவ் என்கிற துடிப்பான அதிகாரியாக, கிட்டத்தட்ட இன்னொரு விஜயசாந்தியாக நடிக்கிறார் பிரியாமணி.. ஏற்கனவே ஒரு தெலுங்குப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த அனுபவம் பிரியாமணிக்கு நன்றாகவே கைகொடுக்கிறதாம்.

இன்னொரு பக்கம் மலையாளத்தில் ஜெயராமுடன் ‘எங்களுட வீட்டிலே அதிதிகள்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். இது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதையாம். இதுவும் தவிர ஏதாவது ஒரு படத்திலாவது வில்லியாக நடித்துவிடவேண்டும் என்றும் அதற்கான கதையையும் தேடிக்கொண்டு இருக்கிறாராம்.

Comments