பிரச்சனைக்குரிய படத்தை இன்று பார்க்கிறார் சூப்பர்ஸ்டார்!!!

27th of September 2014
சென்னை:ரஜினி தரப்பில் இருந்து முதன்முதலாக ஒரு படத்தின் மீது வழக்கு தொடுக்கிறார்கள் என்றதுமே இந்திய சினிமாவே ஒரு கணம் திகைத்து திரும்பி பார்த்தது. காரணம் இதுவரை ரஜினி யார் மீதும், எந்த ஒரு படத்திற்கு எதிராகவும் வழக்கு தொடுத்ததில்லை.. அப்படி தொடுப்பவரும் அல்ல..

ஆனால் இப்போது வழக்கு தொடர்ந்திருப்பது ‘மெயின் ஹூன் ரஜினிகாந்த்’ என்கிற இந்திப்படத்தின் மீதுதான். அது கூட இந்தப்படத்தில் ரஜினியைப்பற்றி தவறாக சித்தரித்து இருக்கிறார்கள் என ரஜினியின் லாயர்கள் தான், அவர் சார்பாக கேஸ் பைல் செய்திருக்கிறார்கள்.
 
ஆனால் ரஜினியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தங்கள் படம் நிச்சயமாக இல்லை என்றும், சொல்லப்போனால் ரஜினிக்கும் இந்தப்படத்துக்கும் சம்பந்தமே இல்லை என்றும் கூறியுள்ளவர்கள், ரஜினிக்காக தங்கள் திரைப்படத்தை போட்டுக்காட்டி உண்மையை அவருக்கு நிரூபிக்க வாய்ப்பு தருமாறு, ரஜினிக்கு வேண்டுகோள் வைத்தனர்.
 
ஒரு படத்தை தயாரித்து வெளியிடும் தயாரிப்பாளரின் வலி ரஜினிக்கு தெரியாதா என்ன? அதனால் அவர்களது கோரிக்கைக்கு செவிசாய்த்த ரஜினி இன்று தனது மகள் சௌந்தர்யாவுடன் ஏ.வி.எம்மில் உள்ள பிரிவியூ தியேட்டரில் இந்தப்படத்தை பார்க்கிறார்.. தங்களது தரப்பு நியாயத்தை ரஜினி உணர்ந்துகொள்வார் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறார் படத்தின் இயக்குனர் பைசல் சைய்ப்.

Comments