8th of September 2014
சென்னை:த்ரிஷா கன்னடத்தில் புனித் ராஜ்குமாருடன் நடித்த பவர் படம்
ஹிட்டடித்து விட்டது. அதற்கு முக்கிய காரணம் த்ரிஷாவின் கிளாமர் என்று
பேசிக்கொள்கிறார்கள். அதோடு, முதல் படமே அங்கு வெற்றி என்பதால்
த்ரிஷாவுக்கு அங்குள்ள இயக்குனர்கள் சிவப்பு கம்பள வரவேற்பு
கொடுத்திருக்கிறார்களாம். அதனால் பெங்களூரில் முகாமிட்டு பிசியாக கதை
கேட்டுக்கொண்டிருக்கிறார் த்ரிஷா.
இந்த நிலையில்,
அதே பவர் படத்தின் ஆடியோ பங்கஷனுக்கு த்ரிஷா செல்லாமல் வழக்கம்போல் டேக்கா
கொடுத்ததால் அவருக்கு எதிராக அப்படக்குழுவினர் கடுமையான மிரட்டல்
விட்டனர். அதனால் பகீரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொண்ட த்ரிஷா, இனிமேல் எந்த
ஆடியோ விழாவையும் புறக்கணிக்க மாட்டேன் என்றும் அவர்களிடம் உறுதி
அளித்தார்.
முன்னதாக, தமிழில் ஜெயம்ரவியுடன்
நடித்துள்ள பூலோகம் படத்தின் ஆடியோ விழாவையும் வழக்கம்போல்
புறக்கணித்திருந்த த்ரிஷா, அதையடுத்து, தனக்கு சம்பந்தமே இல்லாத அமரகாவியம்
படத்தின் ஆடியோ விழாவில் நயன்தாராவுடன் ஜோடி போட்டுக்கொண்டு கலந்து
கொண்டார். இதுதான் தமிழ் சினிமாவைச்சேர்ந்த பலருக்கு த்ரிஷா மீது டென்சனை
அதிகப்படுத்தியது. குறிப்பாக பூலோகம் படக்குழுவினர் கடுப்பாகி விட்டனர்.
இந்த
நிலையில், தற்போது கெளதம்மேனன் இயக்கத்தில் அஜீத்துடன் நடித்து வருகிறார்
த்ரிஷா. இந்த படத்தின் ஆடியோ விழாவில் கண்டிப்பாக த்ரிஷாவை கலந்து கொள்ள
வேண்டும் என்று இப்போதே அப்பட குழுவினர் அவரிடம் கேட்டுக்கொண்டு
வருகிறார்களாம். ஆனால் அதற்கு இன்னமும் உறுதியான பதிலை சொல்லவில்லையாம்
த்ரிஷா. வருவேன், வரமாட்டேன் என்று எந்த பதிலையும் கொடுக்காமல் ஒரு
புன்முறுவலோடு நிறுத்திக்கொண்டாராம். ஆக, இந்த முறையும் த்ரிஷா டேக்கா
கொடுக்கப்பேகிறார் என்பது இப்போதே உறுதியாகி விட்டது என்கிறார்கள்.
Comments
Post a Comment