12th of September 2014
சென்னை:தற்போது ஷங்கரின் பாசறையில் இருந்து ரஜினி நடித்த ‘சிவாஜி’, ‘எந்திரன்’ ஆகிய இரண்டு படங்களிலும் துணை இயக்குனராக பணியாற்றிய கார்த்திக் என்பவர் ‘கப்பல்’ என்கிற படத்தை இயக்குவதன் மூலம் இயக்குனராகியுள்ளார். இந்தப்படத்தில் கதாநாயகனாக வைபவ், கதாநாயகியாக சோனம் நடிக்க, முக்கிய வேடத்தில் கருணாகரன் நடித்துள்ளார். ‘ஐ’ ஸ்டுடியோஸ்’ என்னும் புதிய நிறுவனம் இந்தப்படத்தை தயாரித்துள்ளது.

தமிழ் சினிமாவை பொறுத்தவரை இயக்குனர் ஷங்கரின் படங்கள் வெளியாகும்போது ஏற்படும் பரபரப்பிற்கு சற்று இணையாகவே அவரது உதவியாளர்கள் இயக்குனர்களாக மாறும்போதும் ஒரு பரபரப்பு ஏற்படும். பலர் அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றவும் செய்திருக்கிறார்கள்.
அந்தவகையில் கார்த்திக்கும் தனது குருநாதருக்கு படத்தை போட்டுக்காட்ட முழு நீள காமெடிப்படமாக உருவாகியுள்ள இந்தப்படத்தில் தனது சீடரின் வேலையைக்கண்டு திருப்தியடைந்துள்ளார் ஷங்கர். படத்தின் ரிலீஸ் பிளான் என்ன என கார்த்திக்கிடம் கேட்டபோது யாராவது கேட்டால் நல்ல விலைக்கு விற்க வேண்டியதுதான் என அவர் கூறியிருக்கிறார்..
வேறு யாரோ ஏன், நானே எனது ‘எஸ் பிகசர்sஸ்’ சார்பாக வாங்கி வெளியிடுகிறேன் என கூறி இந்தப்படத்தின் வெளியிடும் உரிமையை வாங்கியுள்ளார் ஷங்கர்.. அனேகமாக நவம்பரில் கப்பலை ரிலீஸ் செய்வார்கள் என தெரிகிறது. ஷங்கரின் சிஷ்யர் படம் என்பது போக, ஷங்கரே வெளியிடுகிறார் என்பதால் இந்த ‘கப்பல்’ கவிழாமல் கரைசேரும் என்பது உறுதியாகியுள்ளது.
Comments
Post a Comment