18th of September 2014
சென்னை:ஹூன் ரஜினிகாந்த் என்ற பெயரில் ஹிந்தியில் உருவாகி வருகிறது. இந்த
படத்தை வெளியிட தடைவிதிக்கக்கோரி நடிகர் ரஜினி காந்த் சென்னை ஐகோர்ட்டில்
வழக்கு தொடர்ந்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–
தமிழ் நடிகர் ஆதித்யா நடித்துள்ள ‘மே ஹூ ரஜினிகாந்த்’ என்ற பெயரில்
இந்தி மொழியில் படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் ‘என் பெயர்
ரஜினிகாந்த்’ என்ற பெயரில் தமிழ் மொழியிலும் வெளியாகிறது. இந்த படத்தை
வர்ஷா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த படத்தில், விபசாரம் உள்ளிட்ட ஆபாச காட்சிகள் அதிக அளவில் இடம்
பெற்றுள்ளது. இந்த படம் என் பெயரை பயன்படுத்தி வெளியானால், எனக்கு
சமுதாயத்தில் உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படும். எனவே, இந்த படத்தில்
ரஜினிகாந்த் என்ற என்னுடைய பெயரை பயன்படுத்தியதையும், படத்தில் என் பெயரை
கொண்டு கதாபாத்திரங்கள் இடம் பெற்றுள்ளதையும் நீக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு நீதிபதி தமிழ்வாணன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி, ‘வழக்கு விசாரணையை 22–ந்தேதிக்கு
தள்ளிவைத்து உத்தரவிட்டார். அதுவரை, ரஜினிகாந்த் என்ற பெயரை பயன்படுத்தி
திரைப்படத்தை வெளியிடுவதற்கு வர்ஷா நிறுவனத்துக்கு இடைக்கால தடை
விதித்துள்ளார்.
Comments
Post a Comment