27th of September 2014
சென்னை:கார் விபத்தில் உயிர் தப்பினார் ஷில்பா ஷெட்டி.குஷி படத்தில் விஜய்யுடன் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடியவர் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி. பிரபுதேவா ஜோடியாக மிஸ்டர் ரோமியோ படத்திலும் நடித்தார். ராஜ்குந்த்ராவை திருமணம் செய்த பிறகு நடிப்பிலிருந்து ஒதுங்கினார்.

நேற்று முன்தினம் கடை திறப்பு விழாவுக்காக அவர் பஞ்சாப் சென்றிருந்தார். ஜலந்தரில் உள்ள ஒரு கடையைத்தான் அவர் திறக்க இருந்தார். இதற்காக காரில் பின் சீட்டில் அமர்ந்தபடி ஷில்பா சென்று கொண்டிருந்தார். கபுர்தலா எனும் இடத்தில் வந்தபோது, ஷில்பாவின் கார் எதிரே வந்த கார் மீது பலமாக மோதியது.
இதில் இரண்டு கார்களின் முன்பகுதியும் நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக ஷில்பாவுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. டிரைவர்களும் உய¤ர் தப்பினர். உடனே விழா குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அனுப்பிய மற்றொரு காரில் ஏறி நிகழ்ச்சிக்கு சென்றார் ஷில்பா.
Comments
Post a Comment