ஹன்சிகாவை அடுத்து தமன்னாவுடன் ஜோடி சேரும் சிவகார்த்திகேயன்!!!

 1st of September 2014
சென்னை:சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிப்பெற்ற படம் ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’.
இப்படத்தை இயக்கிய பொன்ராம் அடுத்ததாக ‘ரஜினி முருகன்‘ என்ற படத்தை இயக்குகிறார். இதிலும் சிவகார்த்திகேயன்தான் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தில் ரியல் எஸ்டேட் புரோக்கராக சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். முதலில் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடிப்பதாக தகவல் வந்தது. பிறகு லட்சுமிமேனன் என்றார்கள்.

ஆனால் இவர்கள் அனைவரையும் பின்னுக்கு தள்ளிவிட்டு இப்போது தமன்னா நடிப்பதாக தகவல் வந்துள்ளது. தற்போது சிவகார்த்திகேயன் ‘எதிர்நீச்சல்’ பட இயக்குனர் துரைசெந்தில்குமார் இயக்கும் ‘காக்கி சட்டை‘ படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்தப்படம் முடிந்த உடன் பொன்ராம் இயக்கும் ‘ரஜினி முருகன்’ படத்தில் நடிக்கவிருக்கிறார் சிவா.
லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்கவுள்ளது. இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மான் கராத்தே படத்தில் ஹன்சிகா….ரஜினி முருகனில் தமன்னா…கலக்குங்க பாஸ்...

Comments