சிபிராஜ் படத்தை வாங்க பலத்த போட்டி!!!

26th of September 2014
சென்னை:நாய்கள் ஜாக்கிரதை… பெயரே படம் பார்க்கும் ஆவலை தூண்டும் விதமாக அமைந்தது சிபிராஜுக்கு கிடைத்த முதல் சக்சஸ்.. இந்தப்படத்தில் சிபிராஜுக்கு ஜோடியாக ‘வெளுத்துக்கட்டு’ அருந்ததி நடித்திக்கிறார். ஏற்கனவே சிபிராஜ் நடித்த ‘நாணயம்’ படத்தை இயக்கிய சக்தி சௌந்தரராஜன் தான் இந்தப்படத்தை  இயக்கியுள்ளார்..

தரண்குமார் இந்தப்படத்துக்கு இசையமைக்கிறார். இதில் கதாநாயகனுக்கு இணையான கேரக்டரில், பயிற்சி பெற்ற பெல்ஜியம் ஷெப்பர்டு இனத்தைச் சேர்ந்த நாய் ஒன்றும் நடிக்கிறது. இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது ரிலீசுக்கான வேலைகள் பரபரப்பாக நடந்து வருகின்றன.
 
இந்த நிலையில் படம் நன்றாக வந்திருப்பதை கேள்விப்பட்ட சினிமாவின் மிக முக்கியமான பிரபல நிறுவனங்கள் இந்தப்படத்தை வாங்குவதற்காக போட்டியிட்டுக்கொண்டு இருக்கின்றனவாம். இன்னொரு பக்கம் படத்திற்கான வரவேற்பை பார்த்து இந்தப்படத்தை தயாரித்துள்ள சத்யராஜ், தானே சொந்தமாக வெளியிட்டு விடலாமா என்றும் யோசித்துக் கொண்டு இருக்கிறாராம். அனேகமாக அக்டோபர் இறுதி அல்லது நவம்பர் முதல் வாரத்தில் படம் வெளியாகும் என்று தெரிகிறது

Comments