12th of September 2014
சென்னை:ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில் ஷங்கர் டைரக்ஷனில் விக்ரம், எமி ஜாக்சன் நடிக்க 180 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாராகி இருக்கிறது ‘ஐ’ படம்.. இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை வரும் செப்டம்பர்-15ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் மிக பிரம்மாண்டமாக நடத்த இருக்கிறார் படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன்.
இந்த விழாவுக்கு ஹாலிவுட் நடிகர் அர்னால்டு வருகிறார்.. ஜாக்கிசானும் வர இருக்கிறார். நமது சூப்பர்ஸ்டார், உலக நாயகன் அனைவரும் தங்களது படப்பிடிப்பை ஒருநாள் நிறுத்திவைத்துவிட்டு வருகிறார்கள் ஷங்கர் மீதுள்ள அன்புக்காக..
இந்தி உட்பட தென்னிந்திய முன்னணி நடிகர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் நேற்று முன்தினம் மீடியாவிடம் பேசிய ஆந்திர இளவரசன் மகேஷ்பாபுவோ தான் ‘ஐ’ பட விழாவில் கலந்துகொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.
தான் நடித்துக்கொண்டிருக்கும் படத்தின் வேலைகள் நிறைய இருப்பதாக அதற்கு காரணம் கூறியுள்ளார்… அதேபோல ஷங்கர் இயக்கத்தில் அவரது அடுத்த படத்தில் தான் நடிக்க இருப்பதாக சொல்லப்படும் தகவலில் துளியும் உண்மையில்லை என மறுத்துள்ளார் மகேஷ்பாபு.
Comments
Post a Comment