ஹேப்பி பர்த்டே ட்டூ பவன் கல்யாண்!!!

2nd of September 2014
சென்னை:மெகாஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி என்ற அடையாளத்துடன் 1996ல் தெலுங்கு சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் பவன் கல்யாண்.. இன்று பிறந்தநாளை கொண்டாடும் பவன் கல்யாணுக்கு 43 வயது ஆகிவிட்டதுஎன்றால் நம்பமுடியவில்லை.

அன்று பார்த்த அதே இளமை.. இன்னும் சொல்லப்போனால் நாளுக்கு நாள் இளமை கூடிக்கொண்டுதான் போகிறது. பின்னே சும்மாவா பவர்ஸ்டார் என்று பட்டம் கொடுத்திருக்கிறார்கள்.. பவன் கல்யாண் சினிமாவில் அடியெடுத்து வைத்த இந்த 17 வருடங்களில் 21 படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார்.
 
காரணம் வருடத்திற்கு ஒரு படம் கொடுத்தாலும் அது நச்சென்று இருக்கவேண்டும் என்பது இவரது ஃபார்முலா. நடிப்போடு மட்டுமே நின்றுவிடாமல் ஸ்டண்ட் காட்சிகள் ஒருங்கிணைப்பு, பின்னணி பாடுவது என சகல துறைகளிலும் இறங்கி கலக்கும் பவன் கல்யாண், ‘ஜானி’ என்ற ஒரு படத்தை இயக்கியும் உள்ளார்.
 
இவர் நடித்துள்ள ‘கப்பார்சிங்-2’ படம் ரிலீஸுக்கு தயாராக இருக்க, இன்னொரு பக்கம் ‘கோபாலா கோபாலா’வில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார் பவன். அவரின் வெற்றிகள் தொடர அவரது பிறந்தநாளான இன்று poonththalir-kollywood தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறது

Comments