10th of September 2014
சென்னை:கோடிக்கணக்கான ரசிகர்களால் அதிகம் எதிர்ப்பார்க்கப்படும் படம் கத்தி. இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் இருந்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த படக்குழுவினர் அவரை உடனே அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்குப்பின் டாக்டர் கூறியதாவது “இடைவிடாத படப்பிடிப்பும் தூக்கமின்மையும் தான் இந்த மயக்கத்திற்கு காரணம்” என்று கூறியுள்ளார்.
சிகிச்சைக்குப்பின் ஏ.ஆர்.முருகதாஸ் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக மருத்துவமனையிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளனர். விஜய், சமந்தா நடிப்பில் அனிருத் இசையில் உருவாகிக் கொண்டிருக்கும் இந்த படம் வருகிற தீபாவளிக்கு திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 18ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது…
Comments
Post a Comment